'அடிக்கிறா அடிக்கிறா வாய் மேல அடிக்கிறா...' விஜய் டிவியில் ரீ என்ட்ரி கொடுத்த ஜூலி!
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜூலியானா அதன் பிறகு முதல் முறையாக விஜய் டிவியின் கிங் ஆப் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜூலியானா, சிறுவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியான கிங் ஆப் காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஜூலியானாவுக்காக டிஆர்பி ரேட் எகிரியது. இதனால் அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியது.
இந்நிலையில் ஓவியா விவகாரத்தில் பொய் மேல் பொய் சொல்லியும், அவரது சகிக்க முடியாத செயல்பாடுகளுக்காகவும் மக்கள் ஜூலி மீது வெறுப்பை கக்கினர். பொய் பேசியதற்காக கமலிடம் குட்டு வாங்கியும் திருந்தாமல் ஜூலியானா ஓவர் ஆக்ட் செய்தார்.

ஒதுக்கி வைக்கப்பட்ட ஓவியா
மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஒவியாவுக்கு அவ பெயரை ஏற்படுத்துவதற்காக சக போட்டியாளர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளான ஓவியா, ஆரவ்வு்ம காதலிப்பதாக கூறி விட்டு ஏமாற்றியதால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

வெளியேறினார்
இதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து அவராகவே வெளியேறினார். இதனால் சக போட்டியாளர்களான ஜூலி, சக்தி, காயத்ரி ஆகியோர் மனதுக்குள் சிரித்து கொண்டனர். எப்படா சான்ஸ் கிடைக்கும் என்று காத்திருந்த மக்களுக்கு இன்ப செய்தியாக எவிக்ஷன் லிஸ்டில் ஜூலி வந்தார். மக்களால் வெளியேற்றப்பட்டார்.

பரணியை சந்திக்க....
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது பரணி சுவர் ஏறி குதித்த போது அவருக்கு உதவாதது ஏன் என்று கேட்டார். இதைத் தொடர்ந்து வெளியேறிய மறுநாளே சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரணியை சந்திக்க சென்றார் ஜூலி. முகத்தில் துணி கட்டியவாறே அவர் பொது இடங்களில் சென்று வந்தார்.

முதல் முறையாக...
பொது இடங்களுக்கு பயந்து பயந்து சென்று வந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிங் ஆப் காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜூலியானா கலந்து கொண்டார். அவரது புகழ்பெற்ற வசனமான அடிக்கிறா அடிக்கிறா வாய் மேல அடிக்கிறா என்பதை ஒரு சிறிய குழந்தை நடித்து கிண்டல் செய்தது.
|
திரும்பி வந்துட்டேனு சொல்லு...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புத்தர் முகம் கொண்ட ஆடையை அணிந்து கொண்டு குத்துப்பாட்டுக்கு ஆபாசமாக ஜூலியானா நடனமாடியது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை சொல்லும் விதமாக கபாலியின் வந்துட்டேன் திரும்பி வந்துட்டேனு சொல்லு என்ற வசனத்தை பேசினார். இதனால் எத்தனை பேர் கடுப்பானார்களோ தெரியவில்லை.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications