பீகார் தோல்வி வெறும் ஆரம்பம் தான்: பாஜக பற்றி குஷ்பு பேட்டி
சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் மூலம் பாஜகவின் தோல்வி முகம் துவங்கியுள்ளது. இனி அக்கட்சி பல தோல்விகளை சந்திக்கும் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி தோற்கடித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இது துவக்கம் தான். இனி அந்த கட்சி பல தோல்விகளை சந்திக்கும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. அது தான் அக்கட்சியின் தோல்விக்கு காரணம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக நான் தீவிரமாக பிரச்சாரம் செய்வேன். எங்கெங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறுகிறதோ அங்கெல்லாம் செய்வேன். நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறி அறிஞர்களும், சாதனையாளர்களும் விருதுகளை திருப்பிக் கொடுக்கும் விஷயத்தில் காங்கிரஸ் யாரையும் தூண்டிவிடவில்லை.
விருதுகளை திருப்பிக் கொடுப்பவர்களை பற்றி பாஜகவினர் தரக்குறைவாக விமர்சிப்பது சரி அல்ல என்றார்.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications