காங்கேயம் அருகே விபத்து: திருமண விழாவிற்கு சென்ற தம்பதி உட்பட 4 பேர் பலி!
காங்கேயத்தில் நடைபெற்ற விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை: காங்கேயத்தில் நடைபெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காங்கேயம் சாலையில் நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி சத்யா, மைத்துனர் பார்த்திபன் மற்றும் குழந்தை துர்கா ஆகியோர் இரு சக்கர வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்புறத்திலிருந்து சிமெண்ட் ஏற்றிய மினி லாரி ஒன்று இரு சக்கர வாகனம் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பார்த்திபன், அவரது சகோதரி சத்யா இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சக்திவேல், மற்றம் சிறுமி துர்கா படுகாயமடைந்தனர். விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அறிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடியவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சக்திவேல் மற்றும் சிறுமி துர்கா ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சாலைவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் 4 பேர் பயணம் செய்ததுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications