பறவைக் காய்ச்சல் அலர்ட்.. நீலகிரியில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழிகளுக்கு தடை!
நீலகிரி: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அங்கிருந்து நீலகிரிக்கு கொண்டு வரப்படும் கோழிகள் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாவட்ட எல்லைப்பகுதியில் 7 சோதனைச்சாவடிகள் அமைத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி, காடை, வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கேரளாவை ஒட்டி உள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் அடிக்கடி பரவும் பறவைக் காய்ச்சல் நோயை கருத்தில் கொண்டு, நாமக்கல் மண்டலத்தில், உயிரியல் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் அபாயத்தைக் குறைக்க கால்நடை மருத்துவக் கல்லூரி ஆய்வகங்கள் மூலம் தொடர்ச்சியான நோய் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கிருந்து நீலகிரிக்கு கொண்டு வரப்படும் கோழிகள் மற்றும் அதை சார்ந்த பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதியில் 7 சோதனை சாவடிகள் அமைத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கண்காணிப்பு நடப்பதாகவும் மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கேரள மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கால்நடைத் துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறுகையில், "பறவை காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழியின் எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் நீலகிரிக்கு கொண்டு வர தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. கேரள எல்லையோரம் உள்ள 7 சோதனை சாவடிகள், கர்நாடகா மாநில எல்லையோரம் உள்ள ஒரு சோதனை சாவடி ஆகிய 8 இடங்களில் தலா ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை, வருவாய் துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளை தாக்கும். மனிதரையும் தாக்கக்கூடியது. நோய் தாக்கிய வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் வனப்பறவைகள் மூலம் இந்த நோய் நீலகிரி மாவட்டத்திலும் பரவ வாய்ப்பு உள்ளது. பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோழி, வாத்து, வான்கோழி உள்ளிட்ட பல்வேறு பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இதர பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications