அதிசய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள்... கடற்கரைகளில் அறிவியல் இயக்கத்தின் நிலா காண் நிகழ்வு!
அதிசய நிகழ்வான சந்திர கிரகணம் மற்றும் சூப்பர் மூனை காண்பதற்கு தமிழ்நாடு பிர்லா கோளரங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Recommended Video

சென்னை : 152 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ள அரிய நிகழ்வான சந்திர கிரகணத்தை காண ஆய்வாளர்களும், வானியல் ஆராய்ச்சியாளர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த அதிசய நிகழ்வை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்பதால் தமிழ்நாடு பிர்லா கோளரங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இது குறித்து மாணவர்களுக்கு விளக்கும் அறிவியல் பொதுக்கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவு 3.84 லட்சம் கி.மீ., பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் சந்திரனும் ஒரே நேர் கோட்டி வரும் நிகழ்வுக்ள ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். அப்போது உருவாகுவதே சூப்பர் மூன் என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் நிலவு வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் இருக்கும்.
இதே போன்று ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமியை வெளிநாட்டு ஆய்வாளர்கள் ப்ளூ மூன் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ப்ளூமன் என்பதால் நிலவு நீல நிறத்தில் தெரியும் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். இந்த மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமி என்பதால் அப்படி அழைக்கப்படுகிறது.

நிலவொளியை மறைக்கும் கிரகணம்
இதோடு சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி வரும்போது ஏற்படுகிற சந்திர கிரகணமும் இன்று ஏற்படுகிறது. பூமி, நிலவு, சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது நிலவின் ஒளி மறைந்து இருண்டு காணப்படும். இந்த அரிய நிகழ்வைக் காண தமிழ்நாடு பிர்லா கோளரங்கம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொலைநோக்கிகள் மூலம் பார்க்க ஏற்பாடு
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு பிர்லா கோளரங்கத்தில் 5 தொலைநோக்கிகள் மூலம் பொதுமக்கள் சந்திர கிரகணத்தை துள்ளியமாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோளரங்கத் தலைவர் ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார். மேலும் சிறுவர்களுக்கு கிரகணம் என்றால் என்ன, எதனால் நிகழ்கிறது, சூப்பர் மூன் என்றால் என்ன போன்றவை எல்இடி திரையில் காட்டி விளக்கம் அளிக்கப்படும் என்றும் ஐயம்பெருமாள் கூறியுள்ளார்.

எப்போது கிரகணத்தை பார்க்கலாம்?
சென்னை தவிர்த்து திருச்சி, வேலூர், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு பிர்லா கோளரங்கங்களிலும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார். கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்பதால் மக்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியும் ரசிக்கலாம். மாலை 5.48 மணிக்கு கிரகணம் தொடங்கினாலும் நிலவு உதயம் 6.04க்கு தான் இருக்கும் என்பதால் அப்போது தான் கிரகணத்தை பார்க்க முடியும்.

அறிவியல் இயக்கம் ஏற்பாடு
இதே போன்று ராயபுரம் கடற்கரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நிலா நோக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது. கிரகணம் என்பது அச்சப்படக் கூடிய விஷயமாக ஆன்மிக ரீதியில் பார்க்கப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் அறிவியல் இயக்கம், கிரகணம் என்றால் என்ன என்று மக்களுக்கு அறிவியல் ரீதியில் எடுத்துரைக்கும் விஷயங்களை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பள்ளி, கல்லூரிகளில் விளக்கக் கூட்டம்
தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை சந்திர கிரகணத்தை காணும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பைனாகுலர் மற்றும் தொலைநோக்கிகள் மூலம் விஞ்ஞானிகள் கிரகணட் பற்றி விளக்கம் அளிக்க உள்ளனர். இதே போன்று தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்பட 100 இடங்களில் அறிவியல் கழகத்தினர் கிரகணம் பற்றி அறிவியல் ரீதியிலான புரிதலை ஏற்படுத்துகின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications