கோவில்பட்டியில் நில அபகரிப்பு மோசடி! பாஜகவினர் மீது ஆட்சியரிடம் புகார் அளித்த சக பாஜக பிரமுகர்
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் நில அபகரிப்பு மோசடி செய்ததாக பாஜக பொறுப்பாளர்கள் மீது சக பாஜக பிரமுகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். பாஜக பிரமுகரான இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான 2.74 சென்ட் நிலமும் இரு கடைகளும் உள்ளன. இந்த நிலையில் மாரியப்பன் வேலுமணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

அந்த கடனை அடைக்க 2.74 சென்ட் இடத்தை விற்பனை செய்ய மாரியப்பன் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் இவருடைய பாஜக நண்பர்களான விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் நல்லதம்பி மற்றும் ஆலம்பட்டியைச் சேர்ந்த அட்டை ராசு ஆகியோர் மாரியப்பனுக்குச் சொந்தமான இடத்தை விற்பனை செய்து தருவதாக கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களும் சக கட்சியினர் என்ற அடிப்படையில் அவர்களை மாரியப்பன் நம்பி ஆவணங்களை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மாரியப்பனின் இடத்தை விற்பதற்காக பாலசுப்பிரமணியன், நல்லத்தம்பி, அட்டை ராசு ஆகியோர் கயத்தாறை சேர்ந்த பாஜக வணிகர் பிரிவு மாநில செயலாளர் அசோக்குமார் என்பவரிடம் 1 சென்ட்டுக்கு ரூ 61 லட்சம் என கிரயம் பேசி மொத்த இடத்திற்கும் 1 .67 கோடியை ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதையடுத்து மாரியப்பன் தனது இடத்தை கிரயம் செய்து கொடுத்த நிலையில் அதற்கு சேர வேண்டிய ரூ 1.67 கோடியை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மூவரும் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மாரியப்பனை தொடர்ந்து மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கோவில்பட்டி காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் மன உளைச்சலுக்குள்ளான மாரியப்பன் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தன்னை ஏமாற்றிய பாஜக பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத் தருமாறு மனு கொடுத்துள்ளார். ஏற்கெனவே பாஜகவில் இருந்த கவுதமியின் நிலத்தை சக பாஜகவினரே மோசடி செய்ததாக அவருடைய புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த அழகப்பன் கைது செய்யப்பட்டார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications