பீகார் பாணியில் எந்த நேரத்திலும் புதுவையிலும் ஆட்சி மாற்றம்? அன்றே சொன்னது ஒன் இந்தியா!
பீகார் பாணியில் எந்த நேரத்திலும் புதுவையிலும் ஆட்சி மாற்றம் நிகழலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரி: பீகாரைப் போல எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்பதால் புதுச்சேரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவையில் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. மொத்தம் 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக நாராயணசாமி இருந்து வருகிறார்.

அன்றே சொன்ன ஒன் இந்தியா
பல மாநிலங்களில் கையாண்டு கொல்லைப்புறமாக ஆட்சியைக் கைப்பற்றுவது போல புதுவையிலும் என்.ஆர். காங்கிரஸ்- அதிமுக உதவியுடன் அதிகாரத்தை கைப்பற்ற பாஜக முயற்சித்து வருகிறது. இதனை அண்மையில் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் பதிவு செய்திருந்தது.

பீகார் ஆட்சி மாற்றம்
என்.ஆர். காங்கிரஸ்- அதிமுகவுக்கு மொத்தம் 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் 4 எம்.எல்.ஏக்கள் இந்த அணியுடன் கை கோர்த்தாலே பாஜகவின் பினாமி ஆட்சி அமைந்துவிடும் என அச்செய்தியில் நாம் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் பீகாரில் நிதிஷ்குமார் நேற்று ராஜினாமா செய்து புதிய அரசு உருவாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

ரெங்கசாமி- அமித்ஷா ஆலோசனை
அதேநேரத்தில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமியை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இதனால் புதுவையிலும் ஆட்சி மாற்றம் நடக்கப் போவது உறுதி என இரவு முதலே பரபரப்பு நிலவி வருகிறது.

ரெங்கசாமி- நமச்சிவாயம் ஆலோசனை
இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை தொடர்பு கொண்டு ரெங்கசாமி பேசியுள்ளார். ரெங்கசாமியின் அக்கா மகன்தான் நமச்சிவாயம். அடுத்தடுத்து ஆலோசனைகளால் புதுவையில் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நிகழலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுவை சட்டசபைக்கு அண்மையில் 3 பாஜக எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications