புதுக்கோட்டையில் தமிழிசை பேனர்கள் கிழிப்பு... மர்ம நபர்கள் பற்றி விசாரணை!

புதுக்கோட்டையில் தமிழிசையை வரவேற்று பாஜகவினர் வைத்திருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாஜக பேனர்களை கிழித்த மர்ம நபர்கள் பற்றி விசாரணை!

    புதுக்கோட்டை : புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பாஜக பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை வரவேற்று இந்த பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த இரண்டு தினங்களாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜகவினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். கோவை பாஜக தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து பேசியவர் நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது, பாஜக மீது நடந்த கடைசி தாக்குதலாக இது இருக்கட்டும்.

    BJP banners damaged by unknown persons at Pudukottai

    இரவோடு இரவாக பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தைரியம் இருந்தால் இப்போது வந்து எரியுங்கள், உங்கள் கை இருக்காது என்றும் பேசி வருகிறார். தமிழிசையின் இந்த பேச்சுகள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பாஜக பேனர்களை மர்ம நபர்கள் சிலர் கிழித்துள்ளனர்.

    தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையை வரவேற்பதற்காக அந்தக் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை கிழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+