தேமுதிகவை தூக்கிச் சாப்பிட்ட பாஜக!
சென்னை: வாக்கு சதவீதத்தில் தேமுதிகவை பின்னுக்குத் தள்ளி விட்டது பாஜக. இதுவரை காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு திரிந்த தேமுதிகவுக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
சாலிடாக 10 சதவீத வாக்குகளை வைத்திருந்த தேமுதிக இந்தத் தேர்தலில் தவிடு பொடியாத சிதறிப் போய் விட்டது. அக்கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை காணப்படுகிறது.

கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் நிலைமை இன்னும் மோசம், உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் 3வது இடத்தில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார்.
தேமுதிகவை காங்கிரஸ், பாமக ஆகியவை ஏற்கனவே தூக்கிப் போட்டு மிதித்து விட்டு முன்னேறிப் போய் விட்ட நிலையில் தற்போது பாஜகவும், தேமுதிகவை தாண்டிப் போய் விட்டது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி பாஜக பெற்றுள்ள வாக்குகள் 6,03,315 ஆகும். அதாவது 2.7 சதவீதம். தேமுதிக பெற்றுள்ள வாக்குகள் 5,19,925 ஆகும். அதாவது 2.2. சதவீதம்தான். தொடர்ந்து தேமுதிகவுக்கு கெட்ட செய்தியாகவே வந்து கொண்டிருப்பது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது தேமுதிகவுக்கு அடுத்த இடத்தை சீமானின் நாம் தமிழர் கட்சி பிடித்திருப்பது மிக முக்கியமானது.


Click it and Unblock the Notifications
