என் மகளை 10 பாஜகவினர் சுற்றிக்கொண்டனர்.. கொலை மிரட்டல் விடுத்தனர்.. சோபியா தந்தை பரபரப்பு
பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியாயை பாஜகவினர் சூழ்ந்து கொண்டே கெட்டவார்த்தையில் திட்டியதாகவும், தவறாக புகைப்படம் எடுத்ததாகவும் சோபியாவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியாயை பாஜகவினர் சூழ்ந்து கொண்டே கெட்டவார்த்தையில் திட்டியதாகவும், தவறாக புகைப்படம் எடுத்ததாகவும் சோபியாவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் புகார் அளித்த கடிதம் வெளியாகி உள்ளது. நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று கோஷமிட்டனர். அவரின் இந்த கோஷம் தற்போது வைரல் ஆகியுள்ளது.
சோபியா தற்போது 15 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார். சோபியாவின் தந்தை இது பற்றி புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்துள்ளார்
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சோபியாவின் தந்தை சாமி, போலீசில் தனியாக புகார் அளித்துள்ளார். பாஜகவினர் தன் மகளை திட்டியதாகவும், தமிழிசை அவர்களை தூண்டிவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார். அவர் புகார் அளித்த கடிதம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அமைதி
அந்த புகாரில் சாமி, என் மகள் சோபியா விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசையை பார்த்த உடன் பாஜகவிற்கு எதிராக கோஷமிட்டார். என் மகள் கோஷமிட்டதை கேட்டுவிட்டு முதலில் தமிழிசை அமைதியாக இருந்தார். விமானம் இறங்கும் வரை அவர் அமைதியாக இருந்தார்.

தொண்டர்களை தூண்டிவிட்டார்
அதன்பின் விமான நிலையத்தில் பயணிகள் அமரும் அறைக்கு வந்த பின் தனது தொண்டர்களிடம் இதுபற்றி கூறினார். அவர் தனது தொண்டர்களை தூண்டிவிட்டார் என் மகளை 10 பாஜகவினர் பேர் சுற்றிக்கொண்டு நின்றார்கள். மிகவும் தகாத வார்த்தைகளில் ''*** வெளியே வா உன்னை கொல்லாமல் விடமாட்டோம்'' என்று திட்டினார்கள். (கடிதத்தில் அந்த வார்த்தைகளை சோபியாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்)

புகைப்படம்
மேலும், இவளையும், இவள் குடும்பத்தையும் சும்மா விட கூடாது என்று பாஜக தலைவர்கள் தொண்டர்களிடம் கூறினார்கள். பின் என்னை, என் மனைவியை, மகள் சோபியாவை தகாத வகையில் புகைப்படம் எடுத்தார்கள். இதனால் எங்களை மறித்து இத்தனை இடையூறுகளை செய்த பாஜகவினர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகாரில் கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள்












Click it and Unblock the Notifications