பணி நீக்கமா? நீட் பற்றி ஆளுநரிடம் கேள்வி கேட்டவருக்கு சிக்கல்? சேலம் உருக்காலையில் பாஜகவினர் புகார்
சேலம்: நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள் என ஆளுநர் ஆர்என் ரவியிடம் கேள்வி கேட்ட சேலம் உருக்காலை பணியாளர் அம்மாசியப்பனுக்கு எதிராக பாஜகவினர் பரபரப்பான புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கு சிக்கல் ஏற்படுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பல மாதங்களாக இந்த மசோதா கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மசோதா ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதற்கிடையே தான் கடந்த 12ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தை ஆளுநர் ஆர்என் ரவி நடத்தினார். அப்போது மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்களின் கேள்விகளுக்கு ஆர்என் ரவி பதிலளித்தார். அப்போது சேலத்தில் வசிக்கும் மாணவி ஒருவரின் தந்தை, ‛‛நீட் தேர்வு விலக்குக்கான மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிக்கப்படும்'' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது என்பது மாணவர்களின் போட்டிபோடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம்.நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும். எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்'' என்றார்.
இதையடுத்து பத்திரிகையாளர்களை அவர் சந்தித்த அந்த நபர், ‛‛நீட் தேர்வுக்கு பின்னால் கோச்சிங் சென்டர் உள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனது மகளுக்காக ரூ.20 லட்சம் செலவு செய்துள்ளேன். இது ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை எனது மகளுக்கு செலவு செய்ததை காட்டிலும் அதிகம். நீட் ரத்து செய்யப்பட வேண்டும்'' என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவியிடம் கேள்வி கேட்ட நபர் குறித்த தகவல்கள் வெளியாகின.
அதாவது ஆளுநரிடம் கேள்வி கேட்டவரின் பெயர் அம்மாசியப்பன் என்பதும், அவர் சேலத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும்அவர் மத்திய அரசின் சேலம் உருக்காலையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவரது மகள் நீட் தேர்வில் 623 மணிப்பெண்கள் எடுத்து 878 ரேங்க் பெற்ற நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்த்துள்ளார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவியிடம் நீட் குறித்து கேள்வி கேட்ட அம்மாசியப்பனை மத்திய அரசு பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதாவது அம்மாசியப்பன் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சேலம் உருக்கு ஆலையில் பணியாற்றி வரும் நிலையில் அவரை பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என பாஜகவினர் கூறியுள்ளனர்.
மேலும் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமயைில் உருக்காலை செயல் இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுவில் ‛‛சேலம் உருக்காலையில் பணியாற்றும் அம்மாசியப்பன் மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதிகளை மீறியுள்ளார். மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக பேசியுள்ளார். மீடியாவை சந்தித்து பேசியுள்ளார். இத்தகைய சூழலில் அவரது பணி சேர்ப்பு ஆவணத்தை சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் பொய் இருப்பிட சான்றிதழ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications