புதுவை நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு பாஜக திடீர் ஆதரவு!
புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக பாஜக திடீரென அறிவித்துள்ளது.
புதுச்சேரி: புதுவை நெல்லித்தொகுதி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாஜக திடீரென அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லித்தோப்பு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இன்று இந்த கூட்டணி முடிவு அறிவிக்கப்பட்டுவிடும் எனவும் பாஜக நம்பி இருந்தது.

ஆனால் பாஜகவை உதறிவிட்டு அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை ஆதரிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் அறிவித்தது. இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே திடீரென அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை ஆதரிப்பதாக பாரதிய ஜனதா அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில பாஜக பொதுச்செயலர்கள் ரவிச்சந்திரன், தங்க விக்ரமன் ஆகியோர் இதனை அறிவித்தனர்.
மேலும் நெல்லித்தோப்பு காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை தோற்கடிக்கவே இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications