ராஜா, சிதம்பரம், டி.ஆர்.பாலு... முன்னாள், தற்போதைய அமைச்சர்களோடு நேரடியாக மோதும் பாஜக
சென்னை: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு எட்டு இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேமுதிகவுக்கு 14 தொகுதிகள், பாமகவுக்கு 8 தொகுதிகள், பாரதிய ஜனதாவுக்கு 8 தொகுதிகள், மதிமுகவுக்கு 7 தொகுதிகள், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நீலகிரி, சிவகங்கை மற்றும் தஞ்சையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய மத்திய அமைச்சர்களுக்கு எதிராக களமிறங்குகிறது பாஜக.

நீலகிரி:
நீலகிரியில் திமுக சார்பி்ல மீண்டும் ராஜா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து களம் காண்கிறது பாஜக.

2ஜியைக் தேர்தல் ஆயுதமாக்குமா...
ஏற்கனவே 2ஜி விவகாரத்தில் ராஜாவுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போர்க்கொடி உயர்த்தியது பாஜக. எனவே அதே ஆயுதத்தை வைத்து தனது முன்னிறுத்தி அங்கு பாஜக பிரசாம் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதிமுக வேட்பாளர்...
இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக குன்னூர் நகர மன்றத் தலைவர் டாக்டர் சி.கோபாலகிருஷ்ணன் அறிவிக்கப் பட்டுள்ளார்.

மவுனம் காக்கும் ஆம் ஆத்மி...
அதேசமயம் இது வரை நீலகிரி தொகுதிக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பெயர் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை :
சிவகங்கைத் தொகுதியிலும் பாஜக போட்டியிட உள்ளது. சிவகங்கையில் இம்முறை காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் அல்லது கார்த்தி நிற்க வைக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

சிதம்பரத்தை எதிர்ப்பாரா ராஜா...
இந்நிலையில் சிவகங்கை தொகுதியை தன் வசப்படுத்த பாஜக சார்பில் எச். ராஜா போட்டியலாம் எனத் தெரிகிறது. ஏனெனில் இவர் தீவிர சிதம்பரம் எதிர்ப்பாளர். எனவே இத்தொகுதியிலும் போட்டி கடுமையாக இருக்கும்.

அதிமுக சார்பில்...
அதேபோல், சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் பிஆர்.செந்தில்நாதன் பெயரும், திமுக வேட்பாளராக சுப.துரைராஜ் பெயரும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இடதுசாரிகள்...
தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள் சார்பில் வழக்கறிஞர் எஸ்.கிருஷ்ணன் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

டி.ஆர்.பாலு....
தஞ்சை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் டி ஆர்பாலு நிற்கிறார். பாஜக அவரை தோற்கடிக்கும் வகையில் வானதி சீனிவாசன் அல்லது தமிழிசை செளந்தராஜன் அங்கு வேட்பாளராக்கலாம் எனத் தெரிகிறது.

அமைச்சர்களுடன் மோதும் பாஜக....
தஞ்சை, நீலகிரி மற்றும் சிவகங்கை என இந்த மூன்று தொகுதிகளிலும் பாஜக, முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களுக்கு எதிராக கடுமையான வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications