சேலத்தையே கேட்கலையே. எதுக்கு ஒதுக்கி எங்க உயிரை வாங்கறீங்க.. 'கேப்டன்' டென்ஷன்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் தொகுதி தொடர்பாகத்தான் தேமுதிக, பாமக இடையே பிரச்சினை என்று வெளியில் பேச்சு அடிபட்டு வரும் நிலையில், அந்தத் தொகுதியை முதலிலிருந்தே விஜயகாந்த் கேட்கவில்லை. பாஜகவாகத்தான் தேமுதிகவுக்கு ஒதுக்கி பாமகவையும், தேமுதிகவையும் சேர்த்து டென்ஷாக்கியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் தேர்தல் முடிவதற்குள்ளாகவாவது பிரச்சினை ஓயுமா என்று எல்லோரும் கிண்டலடிக்கும் அளவுக்கு தலைவிரித்தாடுகிறது தொகுதிப் பங்கீடு குழப்பம்.

ஆனால் இந்தக் கூட்டணியின் பல குழப்பங்களுக்கு பாஜகதான் மூல காரணம் என்று தற்போது புதிதாக செய்திகள் கூறுகின்றன.

எதுவுமே பேசாத பாஜக

எதுவுமே பேசாத பாஜக

தேமுதிக தரப்பில் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும், இது இது வேண்டும் என்று தெளிவாக பட்டியல் போட்டு பாஜகவிடம் கொடுத்திருந்தனராம். ஆனால் பாஜக தரப்பில் ரொம்ப நாளாக பதிலே இல்லையாம்.

திடீர் திடீரென்று குழப்பிய பாஜக

திடீர் திடீரென்று குழப்பிய பாஜக

அத்தோடு நில்லாமல் திடீரென தேமுதிகவைத் தொடர்பு கொண்ட பாஜக தரப்பு 10 தொகுதிகள்தான் தருவோம் என்று கூறவே கடுப்பாகி விட்டாராம் விஜயகாந்த்.

கேட்காததையெல்லாம் கொடுத்தா எப்படி

கேட்காததையெல்லாம் கொடுத்தா எப்படி

அதை விட காமெடி தேமுதிக கேட்காத தொகுதிகளையெல்லாம் அக்கட்சிக்கு ஒதுக்கியதாம் பாஜக. அதாவது, மத்திய சென்னை, திருவண்ணாமலை ஆகியவற்றை தேமுதிக கேட்கவே இல்லை. அதைக் கொடுத்தனராம். அதேபோல கேட்ட தொகுதிகளான காஞ்சிபுரம், ஈரோடு இரண்டையும் ம.தி.மு.கவுக்கு கொடுத்து வி்ட்டனர்.

ஆரணி, அரக்கோணம், சிதம்பரம்

ஆரணி, அரக்கோணம், சிதம்பரம்

ஆரணி, அரக்கோணம், சிதம்பரத்தை தேமுதிக கேட்டிருந்தது. அதை பாமகவுக்குத் தள்ளி விட்டுள்ளனர். கேட்காத சேலத்தை கொடுத்துள்ளனர்.

தேவையில்லாத குழப்பம்

தேவையில்லாத குழப்பம்

பாஜகவால்தான் கூட்டணியில் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டதாக தேமுதிக தரப்பில் புலம்புகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+