நீயாவது பூணூலை தான் அறுப்ப.. நாங்க.. சுப.வீயை மிரட்டி ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகி.. நயினார் கப்சிப்!
நெல்லை : சுப.வீரபாண்டியனின் நாக்கை இழுத்துப் பிடித்து அறுத்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து, மிக ஆபாசமாக பாஜக நிர்வாகி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்ரி சேஷாத்ரி தொடர்பான சர்ச்சையின்போது சுப.வீரபாண்டியன் பேசியதை விமர்சித்துப் பேசிய நெல்லை பாஜக நிர்வாகி மகாராஜன், ஆபாசமாகப் பேசி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
முன்னணி தலைவரை மிகவும் ஆபாசமாகப் பேசி பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகியின் செயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக நிர்வாகி பேசிய வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி தமிழக பாஜக சார்பில் நேற்று தமிழகத்தில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். பாஜக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் பாஜக நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

பூணூலை அறுப்பியா
மகாராஜன் பேசுகையில், "அண்ணாவை இடியட் என்று கூறியவரை சுப.வீரபாண்டியன் கடுமையாக மிரட்டுகிறார். அது அவரது கருத்து, அதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தையே இழிவுபடுத்தும் வகையில் பூணூல் அறுப்பதாக சொன்னால், நீயாவது பூணூல் மட்டும் தான் அறுப்ப.. நான் உன் நாக்கை இழுத்துப் பிடித்து அறுப்பேன்.

ஆபாச பேச்சு
கீழேயும் இழுத்து பிடித்து அறுப்போம் நாங்க அப்படி ஆளு உனக்கு தெரியாது. திருநெல்வேலிக்கு நீ வந்து பாரு.. ரெண்டு பக்கமும் அறுக்கிறோமா இல்லையானு பாரு.." என்று ஆபாசமாக ஒருமையில் பேசினார். மகாராஜன் பேசும்போது, அவருக்கு அருகிலேயே நின்றிருந்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தபடி அமைதியாக இருந்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
சுப.வீரபாண்டியன் குறித்து ஆபாசமான வகையில் மிரட்டல் விடுக்குமாறு பாஜக தலைவர் மகாராஜன் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொது மேடையில் கீழ்த்தரமாகப் பேசிய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பத்ரி சர்ச்சை
கிழக்கு பதிப்பக உரிமையாளரும், வலதுசாரி ஆதரவாளருமான பத்ரி சேஷாத்ரி, முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை முட்டாள் என விமர்சித்து ட்வீட் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் இருந்து பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டார்.

சுப.வீ பேசியது
அதைத்தொடர்ந்து திமுக மேடை ஒன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பத்ரி சேஷாத்ரியின் கருத்தைக் கண்டித்திருந்தார். அண்ணா, கருணாநிதி பற்றி எவன் ஒருவன் தவறாக பேசினாலும் மரியாதை கொடுக்க முடியாது, திமிராகப் பேசும் பார்ப்பனர்களின் பூணூலை அறுப்போம் என்கிற ரீதியில் பேசியிருந்தார் சுப.வீரபாண்டியன். அதைக் குறிப்பிட்டே பாஜக நிர்வாகி மகாராஜன் தற்போது மிகவும் ஆபாசமாகப் பேசியுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications