ரஜினிகாந்த் படிக்காதவர்... அரசியலுக்கு வர தகுதியற்றவர்.. பாஜகவின் சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தகுதியற்றவர் என பாஜகவின் சுப்பிரமணிய சாமி விமர்சித்துள்ளார்.
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தகுதியற்றவர் என பாஜகவின் சுப்பிரமணிய சாமி விமர்சித்துள்ளார். ரஜினிகாந்த் கொஞ்சம் கூட கல்வியறவு அற்றவர் என்றும் சுப்பிமணிய சாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான சுப்பிரமணிய சாமி அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார். டிவிட்டரிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வார்.

தமிழர்களை பொர்க்கி என கூறி அலாதி இன்பமடைபவர் இந்த சுப்பிரமணிய சாமி. எப்போதும் தனது வாயால் ஏழரையை கூட்டும் சுப்பிரமணிய சாமி ரஜினிகாந்த் குறித்து தரக்குறைவான கருத்துக்களை கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் படிக்காதவர்
அதாவது கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ள ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர் என கூறியுள்ளார். ரஜினிகாந்த் படிக்காதவர், கொஞ்சமும் கல்வியறிவு இல்லாதவர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு
ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்? எப்போது தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில் சுப்பிரமணிய சாமியின் இந்த விமர்சனங்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிக்காந்தை வளைக்க பாஜக தலைவர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அண்மையில் நடைபெற இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போதும் கூட பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கங்கை அமரன் ரஜினியை சந்தித்து ஆதரவு கோரினார்.
சர்ச்சைக்குரிய கருத்து
இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரே ரஜினிகாந்த் படிப்பறிவு இல்லாதவர் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறி பேசும் சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications