For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழிசை சவுந்தராஜன் மகன் திருமணம்: ஜெ. சார்பில் பரிசு கொடுத்து வாழ்த்திய அதிகாரிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதா சார்பில், தமிழக அரசு அதிகாரிகள் வாழ்த்து செய்தியையும், பரிசு பொருட்களையும் மணமக்களுக்கு வழங்கினார்கள்.

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை - டாக்டர் சவுந்தரராஜன் தம்பதியரின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும் கோவையைச் சேர்ந்த செல்வராஜ் - கோகிலா தம்பதியின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் நேற்று காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் திருமணம் நடைபெற்றது.

BJP leader Tamilisai's son Marriage: Jayalalithaa sends gift

பா.ஜ.க. சார்பில் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால், அமைப்பு துணை பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினார்கள். கவிஞர் வைரமுத்து, நடிகர் கே.ராஜன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் ஆகியோரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் மணமக்களை வாழ்த்தினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் மற்றும் விஜயதரணி எம்.எல்.ஏ., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், மற்றும் மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ்,ஆகியோரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

முதல்வர் ஜெயலலிதா சார்பில், தமிழக அரசு அதிகாரிகள் வாழ்த்து செய்தியையும், பரிசு பொருட்களையும் மணமக்களுக்கு வழங்கினார்கள்.

English summary
Wedding of Tamil Nadu BJP president Tamilisai Soundararajan's son Suganathan Soundararajan in Chennai on Wednesday.A state government official handed over a gift to the couple on behalf of the chief minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X