"முதல்வர்" ஜெயலலிதாவுக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து!
சென்னை: இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

குளச்சல் துறைமுகம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் விரைவுபடுத்த ஜெயலலிதாவின் வருகை பெருமளவில் உதவும் என நம்புகிறேன். அவரது ஆட்சிகாலத்தில் தமிழகம் சிறப்புற வாழ்த்துகள்.
தமிழிசை சௌந்தரராஜன்: தமிழக முதல்வராக மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுவது வரவேற்கத்தக்கது. ஊழல் இல்லாத, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழகம் இருப்பதையே தமிழக்தில் உள்ள ஒவ்வொரும் விரும்புகின்றனர்.
எனவே, புதிதாக பதவி ஏற்கும் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல், நிர்வாகத் திறமை உடையவர்களாக இருக்க வேண்டும். வழக்கின் மூலமாகவும், தொண்டர்களின் பிரார்த்தனையின் மூலமாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விடுதலை கிடைத்திருப்பது மிகப் பெரிய நிம்மதி.
அதேபோன்ற நிம்மதி தமிழக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆகவே, டாஸ்மாக் இல்லாத தமிழகம் என்பதே முதல்வராகப் பொறுப்பேற்றதும் முதல் அறிவிப்பாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications