நாங்களும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்: சொல்கிறார் பாஜக தேசிய பொதுச்செயலர் !
ராமநாதபுரம்: தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை நடத்திய மதுரை பிரகடனம் குறித்த விளக்கக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மது, ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் எதிரொலிக்கும். அதனை முன்னிறுத்திதான் பாஜகாவின் தேர்தல் பிரசாரம் இருக்கும்.

தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். மதுவால் கிடைக்கும் வருமானத்தில்தான் திமுகவும், அதிமுகவும் தங்களது கட்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. பாமகவும், தேமுதிகவும் இப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கின்றன. மதிமுக பொதுச்செயலர் வைகோ மட்டும் தான் கூட்டணியில் இல்லை எனத் தெரிவித்து வெளியேறி விட்டார்.
பாரதிய ஜனதா கட்சியில் சமூக அக்கரை கொண்ட பல கட்சிகள் இணைய ஆர்வமாக உள்ளன.தமிழக மீனவர்களின் பல ஆண்டு கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாற்றுத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என முரளிதர ராவ் தெரிவித்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications