For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா? எச் ராஜா சொல்றாரு பாருங்க!

சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு காரணம் என்ன என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட அந்த வெள்ளத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஒரு நாள் இரவில் கொட்டித் தீர்த்த மழை, செம்பரம்பாக்கம் ஏரி இரவோடு இரவாக திறப்பு போன்றவற்றால் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பரில் வெள்ளத்தில் தத்தளித்தது சென்னை மாநகர்.

முதல் மாடி வரை ஏற்பட்ட வெள்ளத்தால் உணவு உடை வீட்டில் இருந்த பொருட்கள் என அனைத்தையும் இழந்து தவித்தனர் மக்கள். குளிக்க குடிக்க தண்ணீர் இன்றி பெரும் அவதிக்கு ஆளாயினர்.

பல இடங்களில் படகு சவாரி..

பல இடங்களில் படகு சவாரி..

ஏராளமானோர் உயிரிழந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சென்னையின் பல இடங்களில் படகு சவாரி பயன்படுத்தப்பட்டது.

எச் ராஜா விளக்கம்

எச் ராஜா விளக்கம்

சென்னையை திணறடித்த இந்த வெள்ளம் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த வெள்ளத்திற்கு காரணம் என்னவென்று பாஜக தேசிய செயலளார் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தீபம் காட்டப்படவில்லை..

தீபம் காட்டப்படவில்லை..

சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாசம் விளைவதற்குப் பாம்பன் கோவிலில் பல ஆண்டுகளாகத் தீபம் காட்டப்படாததே காரணம் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

வெள்ளத்திற்கு காரணம்

வெள்ளத்திற்கு காரணம்

சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் 1989ஆம் ஆண்டிற்கு பின்னர் இதுவரை தீபம் காட்டபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதுவே சென்னை வெள்ளப்பெருக்கில் சிக்கி நாசமானதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

English summary
Why Chennai affected by flood in 2015 BJP National secretary H Raja explaines. No deepa arathana for Pampan swamigal that is the reason Chennai affected by flood he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X