எங்க ஹீரோ எப்பவுமே மோடிதான்... ஆர்.கே. நகரில் நாங்க ஜெயிப்போம்- தமிழிசை
பாஜகவின் ஹீரோ எப்போதுமோ மோடிதான் என்றும் ஆர்.கே. நகரில் நாங்கள்தான் ஜெயிப்போம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கங்கை அமரன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எங்களுடைய ஹீரோ மோடிதான் என்றார். ஆர்.கே. நகர் தொகுதியில் தாமரை மலரும் என்றும் தெரிவித்தார்.
ஏப்ரல் 12ஆம் தேதி ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்தனர்.
ஆர். கே நகரில் போட்டியிடும் கங்கை அமரன் தண்டையார்பேட்டையில் உள்ள பா.ஜ.க தலைமை தேர்தல் பணிமனையில் இருந்து ஊர்வலமாக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இரட்டை இலை முடக்கம்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், இரட்டை இலை முடக்கப்படும் என்று முன்பே தெரியும் என்று கூறினார். இதற்குக் காரணம் அதிமுகவினர்தான் காரணம் என்றும் தெரிவித்தார். 1989இல் இதேபோன்ற ஒரு அரசியல் சூழல் உருவானது. அப்போதும் இரட்டை இலை முடக்கப்பட்டது. இளம் வயதிலிருந்தே அரசியல் சூழ்நிலைகளை கவனித்துவருவதால் இப்போதும் அதற்கான வாய்ப்பு உண்டு என்ற எனது கருத்தை தெரிவித்திருந்தேன் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

முடக்கப்பட்டது சரியே
அதிமுக கட்சியின் சின்னத்தை முடக்கி அரசியல் ஆதாயம் தேடவேண்டிய நிலையில் பாஜக இல்லை என்றும் கூறினார். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டதுதான் அதிமுக. அவர்கள் இருவரது நோக்கமும் காப்பாற்றப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, முடக்கிவைக்கப்படுவதுதான் சரியானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஹீரோ மோடி
ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தரவில்லை என்று கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த தமிழிசை, எங்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார் என்றார். எங்களின் ஹீரோ எப்பவுமோ மோடிதான், தலைவர் அமித்ஷா தான் அவர்களின் வழியில் சென்று வெற்றி பெறுவோம் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தாமரை மலரும்
கங்கையின் மூலமாக ஆர்.கே. நகரில் தாமரை மலரும் இதன் மூலம் இந்த தொகுதி பிரதமர் மோடியின் நேரடி பார்வைக்கு செல்லும். இதன் மூலம் இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம் என்றும் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications