அதிமுகவில் இணைகிறார் நெல்லையில் வாபஸ் பெற்ற பாஜக மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள்?
நெல்லை: நெல்லை மாகராட்சி மேயர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக மனுத் தாக்கல் செய்து கடைசி நேரத்தில் தடாலடியாக வாபஸ் பெற்று அதிமுக வேட்பாளரான புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வாக உதவிய வெள்ளையம்மாள் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல ஆவடி நகராட்சித் தலைவர் தேர்தலில் திடீரென வாபஸ் பெற்ற பாஜக வேட்பாளர் தாரணியும் அதிமுகவுக்குத் தாவுவதாக செய்திகள் கூறுகின்றன.

நெல்லை மேயர் தேர்தலில் போட்டியின்றி தேர்வாகியுள்ள புவனேஸ்வரி இன்று மாலை சென்னை செல்கிறார். அவருடன் பி.எச். பாண்டியன் உள்ளிட்டோரும் செல்கின்றனர். இந்தக் குழுவில் வெள்ளையம்மாளும் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக குழுவினருடன் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கும் வெள்ளையம்மாள் அவர் முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றுதான் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தேர்தலி்ல போட்டியிடுதற்காக வாழ்த்து கோரியிருந்தார் வெள்ளையம்மாள். இந்த நிலையில் இன்று அவர் வாபஸ் பெற்று விட்டார். வேறு யாரும் போட்டியில் இல்லாததால் புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்?












Click it and Unblock the Notifications