பாஜகவின் முக்கிய நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது.. யார் இந்த அலெக்ஸிஸ் சுதாகர்? பரபர பின்னணி
செங்கல்பட்டு: பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த 28 ம் தேதி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய வழக்கில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சத்யா என்கிற சீர்காழி சத்யா (41). இவர் பிரபல ரவுடியாக உள்ளார். இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழிப்பறி திருட்டு பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தான் சீர்காழி சத்யா பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே தான் சீர்காழி சத்யாவை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 28 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய கூட்டாளிகளான மாரிமுத்து, பால்பாண்டி ஆகியோரும் சிக்கினர். இதையடுத்து அவர்களின் கார், வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீர்காழி சத்யா வைத்திருந்த கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், பட்டா கத்தி உள்ளிட்டவை சிக்கின. இதையடுத்து கைத்துப்பாக்கி பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கைத்துப்பாக்கியை பாஜகவை சேர்ந்த நிர்வாகி சீர்காழி சத்யாவிற்கு கொடுத்தது தெரியவந்தது. அதாவது பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருப்பவர் அலெக்ஸிஸ் சுதாகர். இவர் தான் சீர்காழி சத்யாவிற்கு துப்பாக்கியை சட்டவிரோதமாக வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகியான அலெக்ஸிஸ் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தான் தற்போது அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதாவது அலெக்ஸிஸ் சுதாகர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு எஸ்பி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை செங்கல்பட்டு கலெக்டர் ஏற்றார். இதையடுத்து அலெக்ஸிஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதன்மூலம் பாஜக நிர்வாகி அலெக்ஸிஸ் சுதாகருக்கு ஓராண்டு ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications