உள்ளாட்சித் தேர்தல்: பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி மறுப்பு!

ஏற்கனவே, தேர்தல் காலம் குறுகிய அவகாசத்தில் அறிவிக்கப்பட்டதால் அத்தனை எதிர் கட்சிகளும் ஒதுங்கி நிற்க பாரதிய ஜனதா கட்சி போட்டியிட முடிவு செய்தது.
இதனையடுத்து வேட்பாளர்களை அறிவித்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது.
குறுகிய கால அவகாசம்:
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் குறுகிய காலத்திற்குள் எல்லாம் தயார் செய்து வேட்புமனு தாக்கல் செய்ய சென்றனர். ஆனால் பல இடங்களில் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
தாக்கப்பட்ட வேட்பாளர்கள்:
வேட்புமனுவை தாக்கல் செய்யவிடாமல் தடுத்தது மட்டுமல்லாமல் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் தாக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
புதுக்கோட்டை ரகளை:
புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற எங்களது வேட்பாளர் பழ.செல்வம் பல மணி நேரம் அலுவலகத்தில் காத்திருந்தும் கதவுகள் பூட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.
தொண்டர்கள் மேல் தாக்குதல்:
நீதி கேட்டு சாலை மறியல் செய்த தொண்டர்களையும், அவரையும் தாக்கியது மட்டுமல்லாமல் கைதும் செய்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் அவ்வளாகத்தில் வந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்ற செய்தியும் வந்திருக்கிறது.
வேட்புமனு மறுப்பு:
அதேபோல விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திலும், மயிலம் ஒன்றியத்திலும் ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தலுக்கான வேட்புமனு வாங்குவது மறுக்கப்பட்டிருக்கிறது.
தாக்கப்பட்ட வேட்பாளர்கள்:
காலையில் இருந்தே வேட்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அங்கேயும் அராஜகம் தலைவரித்தாடியிருக்கிறது. நீதி கேட்டு சாலை மறியல் செய்த பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
மறுக்கப்பட்ட ஜனநாயகம்:
ஜனநாயகம் என்பது ஆரம்பத்திலேயே மறுக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனு கூட தாக்கல் செய்ய முடியாத நிலை நிலவுகிறது.
நடந்தது என்ன:
தமிழகத்தில் என்ன நடந்தது என்பதை தமிழக தேர்தல் ஆணையம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுக்கப்பட்ட இடங்களில் மறு தேதி குறிப்பிட்டு வேட்பு மனுக்கள் வாங்கப்பட வேண்டும்.
அரஜாகங்கள் மீது நடவடிக்கை:
தமிழக அரசும், காவல் துறையும் இந்த தேர்தலில் இதுபோன்ற அராஜகங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்கவும் அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்ய வேண்டும்.
நீதிமன்றம் செல்ல தயங்காது:
வேட்புமனு வாங்க மறுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையெல்லாம் நடக்கவில்லை என்றால் பாரதீய ஜனதா கட்சி போராட்டம் நடத்துவதற்கும், நீதிமன்றம் செல்வதற்கும் தயங்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications