பெண்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.. தமிழிசை முழக்கம்
சென்னை: மதுக் கடைகளை மூட பெண்களைத் திரட்டி தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
கல்விக்கூடங்கள் நிறைந்த தமிழகத்தை மதுக்கூடங்கள் நிறைந்த மாநிலமாக மாற்றி மிகப்பெரிய சமுதாய சீரழிவுக்கு அரசே வழிவகுத்து விட்டன. எத்தனையோ குடும்பங்கள் மதுவால் சீரழிந்து நிம்மதி இல்லாமல் தவிக்கின்றன. லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாகி கண்ணீர் வடிக்கிறார்கள். இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வருகிறார்கள். இந்த சீரழிவில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.

மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி மாநில அளவில் பா.ஜ.கவினர் நடத்திய போராட்டத்தில் 36 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 16 ஆயிரம் பேர் கைதானார்கள்.
மதுவிலக்குக்காக போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உயிரைவிட்டு இருக்கிறார். இதன் பிறகாவது அரசு மதுவிலக்கை உடனடியாக அமுல்படுத்த முன்வர வேண்டும்.
சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.கவும் பங்கேற்றது. சர்வகட்சி முடிவுப்படி அங்கு 4-ந் தேதி முழு அடைப்பு நடத்தப்படுகிறது. இதில் பா.ஜ.க கலந்து கொள்கிறது. ஆனால், மாநில அளவில் முழு அடைப்பு நடத்துவது பற்றி குறிப்பிட்ட சில கட்சிகள் மட்டுமே அறிவித்துள்ளன. அதற்கு ஆதரவு அளிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் உயர்மட்ட குழுவுடன் பேசி முடிவு செய்வோம்.
மது ஒழிப்பு போராட்டம் மிகப்பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. அரசு உடனடியாக மதுவிலக்கு பற்றி அறிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மாநிலம் முழுவதும் பெண்களை திரட்டி அனைத்து மதுக்கடைகள் முன்பும் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications