2016ல் அதிமுக, திமுக துணையின்றி பாஜக ஆட்சி அமைக்கும்: சென்னை ஏர்போர்ட்டில் இருந்து பொன்னார்
சென்னை: 2016ம் ஆண்டில் தமிழகத்தில் அதிமுக, திமுக துணையின்றி பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று காலை விமானம் மூலம் கிளம்பி சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் இல்லாமல் வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்தை பாஜக அளிக்கும்.
2016ம் ஆண்டில் தமிழகத்தில் அதிமுக, திமுக துணையின்றி பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதே நம் நாட்டை முன்னேற்றத் தான் என்றார்.
முன்னதாக அவர் பெங்களூரில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசுகையில், தென் மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு அடுத்த ஆண்டு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் சட்டசபை தேர்தல் பற்றி முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications