எங்களால் மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும் – சொல்வது தமிழிசை
கும்பகோணம்: பாஜகவினால் மட்டுமே தமிழகத்தினை காப்பாற்ற முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பா.ஜ.கவின் 2 நாள் மாநில செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

அக்கூட்டத்தில் அவர், "தமிழகத்தில் பா.ஜ.க மாபெரும் சக்தியாக உருவாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஏற்படாத ஒரு மாற்றம், ஒரு மலர்ச்சி இனி ஏற்பட போகிறது.
2 எம்.பி.க்களோடு இருந்த பா.ஜ.க இன்று அறுதி பெரும்பான்மையோடு அகில இந்திய அளவில் பெரிய கட்சியாக திகழ்கிறது. இதேபோல தமிழகத்திலும் அந்த நிலை ஏற்படும். அதற்கு அடித்தளம் அமைக்கும் கூட்டமாக தான் இந்த கூட்டம் திகழ்கிறது.
இன்று அகில இந்திய அளவில், ஏன் உலகிலேயே 10.5 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சி பா.ஜ.கதான். இந்த கட்சியில் நாம் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்பதே பெருமை தான்.
இதுவரை தமிழகத்தில் ஆண்ட கட்சியும், தேசிய கட்சியும் கூட உறுப்பினர்களை விரைவாக சேர்த்ததில்லை. பா.ஜ.க.வினர் ஒவ்வொருவரும் பாடுபட்டதன் விளைவாக தமிழகத்தில் 3 மாதங்களிலேயே 40 லட்சம் உறுப்பினர்களை நாம் சேர்த்துள்ளோம்.
வரும் காலத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. மாற்று சக்தியாக உருவாகும். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
ஆனால பா.ஜ.க கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றது. 2016 இல் நாம் ஆளும் கட்சியாக இருக்க போகிறோம். தமிழகத்தை பா.ஜ.க.வால் மட்டுமே காப்பாற்ற முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications