ஆர்.கே. நகர்: புலம்பாமல் 3-வது இடத்துக்காவது முட்டி மோதுங்க... தமிழக பாஜகவுக்கு டெல்லி 'குட்டு'
ஆர்கே நகர் தொகுதியில் பணப் பட்டுவாடா பற்றி புலம்பாமல் 3-வது இடத்துக்காவது முட்டி மோதி முன்னேறுங்க என பாஜக மேலிடம் குட்டு வைத்து அனுப்பியுள்ளதாம்.
சென்னை: ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா பற்றி சதா புலம்பிக் கொண்டே இருக்காமல் மூன்றாவது இடத்தையாவது பிடிக்க முடியுமா என முயற்சித்துப் பாருங்கள் குட்டு வைத்துவிட்டதாம் டெல்லி மேலிடம்.
ஆர்கேநகர் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் திமுக, ஓபிஎஸ் அதிமுக, தினகரன் களமிறங்கியுள்ளனர். அதேநேரத்தில் எப்படியும் வெற்றிபெற போவதில்லை என தெரிந்தே பலியாடாக நிறுத்தப்பட்டிருக்கிறார் பாஜகவின் இசையமைப்பாளர் கங்கை அமரன்.
கங்கை அமரனும் தமக்கு தெரிந்த அத்தனை வழிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். கிராமிய இசைக் கலைஞர்களை அழைத்துக் கொண்டு ஆட்டம் பாட்டம் என கூத்து கலையுடன் பிரசாரத்தை அரங்கேற்றி வருகிறார்.

வியூகங்களால் அதிர்ச்சி
பல இடங்களில் கங்கை அமரனை பாட சொல்லி கேட்டு ரசிக்கிறார்கள் வாக்காளர்கள். அதே நேரத்தில் 20 வாக்காளருக்கு ஒரு நிர்வாகி என தினகரன் தரப்பு வளைத்து போடும் வியூகங்களைக் கண்டு ஆடிப் போயுள்ளராம் கங்கை அமரன்.

பாட்டுதான்... ஆனால் ஓட்டு வராதுதான்
என்னதான் கங்கை அமரன் பாட்டுபாடினாலும் ஓட்டு என்னமோ நோட்டுக்குத்தான் என பாஜக நிர்வாகிகளே தம் காதுபட பேசுவதில் கங்கை அமரனுக்கே கடும் அதிர்ச்சிதானாம். இன்னும் சில இடங்களில் 'அவங்க சம்பாதித்த பணத்தை தந்துட்டாங்க.. நீங்க சம்பாதிச்சது எங்கன்னு? பச்சையாகவே மக்கள் பணம் கேட்பதை கேட்டு நொந்து போனாராம் கங்கை அமரன்.

டெல்லியில் புகார்
இருந்தபோதும் அசராத பாஜகவின் பிரதமர் மோடியின் தொகுதியாக இது மாறும்; மோடியின் சாதனைகளைப் பாரீர் என்ற கரடியாய் கத்தியபடி வலம் வருகின்றனர்.. ஆர்கே நகர் அட்டூழியங்கள் தொடர்பாக டெல்லி மேலிடத்தில் தமிழக பாஜக தலைவர்கள் புகார் செய்திருக்கின்றனர்.

3-வது இடத்தை பாருங்க
ஆனால் டெல்லி மேலிடமோ, அதையெல்லாம் தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ளும்... எப்படியாவது மூன்றாவது இடத்துக்காக முட்டிமோதுங்க...மக்களிடம் தொடர்ந்து பிரசாரம் செய்யுங்க என குட்டு வைத்ததாம். அள்ளிவீசப்படுகிற பணமழையில் நாம அள்ளிவிடுகிறதையெல்லாம் கேட்கிற மனநிலையிலா மக்கள் இருக்கிறார்கள் என புலம்புகின்றனர் பாஜக நிர்வாகிகள்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications