தமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி கருப்புக்கொடி போராட்டம்: மா.கம்யூனிஸ்ட் அறிவிப்பு
தமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி கருப்புக்கொடி போராட்டம் நடக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்ளும் அனைத்து அரசு விழாக்களிலும் இனிமேல் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தனது கல்லூரி மாணவிகளை பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் ஈடுபட்டதன் விளைவாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த விசாரணையில், ஆளுநர் தானாகவே முன் வந்து பேட்டியளிப்பது மேலும் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் விசாரணைக்கு உள்ளாக வேண்டிய ஆளுநரே தானாக முன்வந்து ஒரு விசாரணை குழுவை அமைப்பது உண்மைகளை மூடி மறைப்பதற்கான ஒரு நடவடிக்கை என கருத, வேண்டி உள்ளது.
எனவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இப்பிரச்சினையில் ஆளுநர் நியமித்துள்ள விசாரணைக் கமிஷனை ரத்து செய்ய வேண்டும். உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், உயர்மட்ட புலன் விசாரணைக்குழு அதிகாரிகளை நியமித்து, விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 25ம் தேதி காலை 10 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சவுந்தரராசன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தினை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி மற்றும் மாநில, மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கவர்னர் அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications