குமரிக்கடலில் கடல் சீற்றம் அதிகரிப்பால் படகுப் போக்குவரத்து நிறுத்தம்- சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
குமரி: கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பாலும், சூறைக்காற்றாலும் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரியில் இன்று காலை திடீரென கடலில் சூறைக்காற்று வீசியது. அதோடு கடலின் நீர் மட்டத்திலும் மாற்றம் காணப்பட்டது. இருப்பினும் காலை 8 மணிக்கு வழக்கம் போல விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடந்து கொண்டிருந்தது. திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பகல் 10.30 மணிக்கு கடலில் மீண்டும் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி விவேகானந்தர் பாறைக்கு நடந்து வந்த படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே பாறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணிகளும் அவசர அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். கடல் சீற்றம் தணிந்த பிறகே படகு போக்குவரத்து நடக்கும் என அதிகாரிகள் அறிவிப்பு பலகை தொங்க விட்டனர்.
இதனால் படகு சவாரிக்கு காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கன்னியாகுமரியில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கடல் சீற்றம் காரணமாக அவர்கள் திரிவேணி சங்கமம் மற்றும் சன்செட் பாயிண்ட் பகுதிகளில் கடலின் அருகே செல்லாமல் தொலைவில் இருந்தே பார்த்து விட்டு திரும்பினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications