காவிரி ஆற்றில் வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடல்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் பச்சிளம் பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் பச்சிளம் பெண் குழந்தையின் உடல் மிதப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வந்து குழந்தையின் உடலை மீட்டனர்.
ஆற்றில் வீசியபோது குழந்தை அழும் சத்தம் யாருக்கும் கேட்காமல் இருக்க அதன் வாயில் டேப் போட்டு ஒட்டியுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் அடக்கம் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இந்த கொலையை செய்த குற்றவாளிகள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தொட்டில் குழந்தை திட்டம் நடைமுறையில் இருந்தும் பச்சிளம் குழந்தைகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications