விஜயகாந்த் பேச்சு டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் "வெடி குண்டு"… ஒருவர் கைது
அரசு டாஸ்மாக் கிடங்குக்கு வந்த சரக்கு லாரியில் மதுபாட்டில்களோடு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை எண்ணூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர்: அரசு மதுபான கிடங்கிற்கு சென்ற லாரியில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை எண்ணூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் விளமல் பகுதியில் அரசு மதுபான கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் இறக்குவதற்காக லாரியில் மதுபான பாட்டில்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. சரக்கை இறக்கிக் கொண்டிருந்த போது லாரியில் வெடிகுண்டு இருப்பதை பணியாளர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியுடன் வந்த மோகன் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்ர். வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார்.
அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை எண்ணூர் பர்மா காலனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications