குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருக்கிறோம்... 108க்கு போன் போட்டு மிரட்டிய மர்ம நபர்
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை: பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் 108க்கு போன் போட்டு மிரட்டினர். இதனையடுத்து போலீசார் குஷ்புவின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். விசாரனைக்கு பின், மிரட்டல் தகவல் புரளி என தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு. அரசியல், சினிமா, சின்னத்திரை என பிரபலமாக இருக்கிறார் குஷ்பு. தற்போது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் குஷ்புவின் வீடு உள்ளது. அங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை ஆம்புலன்ஸ் அலுவலகத்துக்கு போன் செய்த அந்த நபர், நடிகை குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த மிரட்டல் போன்கால் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல்கொடுக்கப்பட்டது. குஷ்புவின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அங்கு சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்துள்ளது. அதனையடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
108க்கு போன் போட்டு ஆம்புலன்ஸ்தான் கூப்பிடுவார்கள். இப்படி அலற அடிச்சிட்டாங்களே என்று புலம்புகின்றனர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications