For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: நூற்றாண்டு பாராம்பரியம் மிக்க ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் தீவை நாட்டின் பிறப்பகுதிகளுடன் இணைக்கும் வகையில் கடந்த 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

Bomb threat in Rameswaram Pamban bridge

இந்நிலையில், பாம்பன் பலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னையிலுள்ள ரயில்வே பாதுகாப்புத் துறையினருக்கு மிரட்டல் கடிதம் வந்தது.

மருதுபாண்டியர் குழுவினர் என்ற பெயரில் வந்துள்ள அந்த கடிதத்தில், பாம்பன் பாலத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சென்னை ரயில்வே பாதுகாப்பு படையினர், ராமேஸ்வரம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ராமேஸ்வரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் பாம்பன் பாலத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காதவாறு கண்காணிக்க பாலத்தின் இருமுனைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Maruthu Pandiyar group threatened to blow up the Pamban railway bridge, was nabbed by the Government Railway Police (GRP) at Chennai on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X