50 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்... பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க தயார்!
சென்னை: தமிழகத்தில் பள்ளி திறக்கும் முதல் நாளில் 50 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப் பட உள்ளது.
தமிழகத்தில் 40 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், 10 ஆயிரம் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவை கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப் பட உள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலவச பாடப்புத்தகங்கள்...
அதன்படி, இந்தாண்டு 1 முதல் 9 வகுப்புவரை படிக்கும் 45 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 52 லட்சம் பேருக்கு நோட்டு புத்தகங்களும் வழங்க தயாராக உள்ளன. 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 30 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்பாடு...
பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அரசு வழங்கும் பாடப்புத்தகம், நோட்டு புத்தகங்கள் மாணவர்கள் கையில் கிடைக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

குடோனில் இருந்து...
அதன்படி, அனைத்து மாவட்டத்திற்கும் பாடப் புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள், சீருடைகள் அனுப்பப்பட்டன. அதனை குடோனில் இருந்து பள்ளிக்குத் தலைமை ஆசிரியர்கள் எடுத்துச் சென்று வருகின்றனர்.

மேற்பார்வையில்...
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.சபீதா மற்றும் இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்று வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications