ஆலடி அருணாவின் பேரன் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.. விளையாடிய போது பரிதாபம்
சென்னை: சென்னை தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து 8ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேரன் ஆவார்.
சென்னை தியாகராயநகர், மண்ணடி தெருவை சேர்ந்தவர் கதிரவன். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி மகன் ஆவார். பருப்பு ஏற்றுமதி தொழில் செய்து வரும் கதிரவனின் 15 வயது மகன் ஆதித் குமார்.

இவர் சென்னை எழும்பூரில் உள்ள டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல நேற்று பள்ளி சென்ற ஆதித்யன், பள்ளி முடிந்ததும், பள்ளி கட்டிடத்தின் 2-து மாடியில் சக மாணவர்களுடன் விளையாடியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால்தவறி இரண்டாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ஆதித்தியனை ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆதித் ஏற்கனவே இறந்துவிட்டான் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசுக்கும், மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேள்விப்பட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் உயிரிழந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி இன்று விடுமுறை அறிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications