நடத்தையில் சந்தேகம்… காதலியை கழுத்தை இறுக்கி கொன்ற காதலன்
சென்னை: ஆண் நண்பர்களுடன் வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்த கல்லூரி மாணவியை சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் பெயர் கிரேஸி ஷாலினி வயது 21. இவர் வடபழனி, சைதாப்பேட்டையை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகளாவார். ஷாலினி சென்னையில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார்

கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷாலினி பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் தாம்பரத்தை அடுத்த படப்பை ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த நத்தம் பீவி என்பவரது வீட்டில் அவர் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து மணிமங்களம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கிரேஸி ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நத்தம் பீவி வெளியூர் சென்ற போது வீட்டை பூட்டி விட்டு சாவியை கோடம்பாக்கத்தை சேர்ந்த உறவினர் அப்துல் ரசாக்கின் மகன் பெயிண்டர் ரபீக்கிடம் கொடுத்து இருப்பது தெரிந்தது.
ரபீக்கை போலீசார் பிடித்து விசாரித்த போது காதலியான கல்லூரி மாணவி கிரேஸி ஷாலினியை பூட்டி கிடந்த வீட்டிற்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொன்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து ரபீக்கை போலீசார் கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:
கொலை நடந்தது எப்படி
நானும், கிரேஸி ஷாலினியும் வடபழனியில் உள்ள பள்ளியில் சிறு வயது முதலே ஒன்றாக படித்தோம். இருவரும் காதலித்து வந்தோம்.
கல்லூரிக்கு சென்ற முதல் கிரேஸி ஷாலினி என்னிடம் முன்பு போல் பழகுவது இல்லை. அவள் செல்போனில் ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்தாள்.
இதனை நான் கண்டித்தும் அவள் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் அடிக்கடி சாட்டிங் செய்வார். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
நடத்தையில் சந்தேகம்
உறவினரான நத்தம் பீவி வெளியூர் சென்றதால் அவரது வீட்டு சாவியை என்னிடம் கொடுத்து இருந்தார். கடந்த சனிக்கிழமை கிரேஸி ஷாலினியை அந்த வீட்டிற்கு அழைத்து சென்றேன்.
இருவரும் பேசிக்கொண்டு இருந்த போது ஆண் நண்பர்கள் குறித்து கிரேஸி ஷாலினியை கண்டித்தேன். அவள் என்னை திட்டினாள்.
கழுத்தை நெரித்து கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த நான் மாடு கட்ட கிடந்த கயிற்றால் அவளது கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் பயத்தில் வீட்டை பூட்டி விட்டு ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டேன்.
உறவினர் நத்தம் பீவி வீட்டை திறந்த போது கிரேஸி ஷாலினி பீவி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது. போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications