லஞ்சம் வாங்குவது இழிவு..புகார் வந்தால் கடும் நடவடிக்கை...மின்வாரியம் வார்னிங்..ஷாக் ஆன ஊழியர்கள்
சென்னை:மின் சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. சேவை இணைப்புகளை வழங்க லஞ்சம் வாங்குவது வழக்கமாக உள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழ் பெற சென்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. நேர்மையான அதிகாரிகள் விதிவிலக்காக உள்ளனர். மின்சார வாரியம், வருவாய்துறை உள்ளிட்ட பல அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டாலும் அவ்வப்போது சம்மந்தப்பட்ட துறை சார்ந்த மேலிடம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொலைக்காட்சிகள், ஊடகங்களில் புகைப்படத்துடன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றிய செய்தி வெளியானாலும் லஞ்சம் பெறுவது குறையவே இல்லை.
அந்த வகையில் தற்போது, சேவை இணைப்புகளை வழங்குவதற்கு அதிகாரிகளும், ஊழியர்களும் லஞ்சம் கோருவதும், வாங்குவதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரையடுத்து, இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications