சென்னை மாரத்தான் போட்டியில் பாரம் தாங்காமல் மரப்பாலம் உடைந்து விபத்து - 300 பெண்கள் காயம்
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் நிகழ்ச்சியின் போது, தீவுத்திடல் அருகே மரப்பாலம் உடைந்து விழுந்ததில், சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.
சென்னை தீவுத்திடலில் பிங்கத்தான் தனியார் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. தீவுத்திடலில் இருந்து அடையாறு வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாரத்தானில் பெண்கள் மட்டுமே பங்குபெற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதிகாலையிலேயே தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தீவுத்திடலில் கூவம் ஆற்றை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை மரப்பாலம் என்றே அனைவரும் அழைத்து வருகிறார்கள். இந்த பாலம் வழியாக எளிதாக தீவுத்திடலை அடையலாம்.
இந்நிலையில் மாரத்தானில் பங்கேற்க வந்திருந்த பெண்கள் இந்த மரப்பாலத்தின் வழியாக தீவுத்திடலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரே நேரத்தில் அதிக பெண்கள் பாலத்தில் ஏறி, கடக்க முயற்சித்தனர். இதில், திடீரென்று மரப்பாலத்தின் நடுப்பகுதி சரிந்து, உடைந்து விழுந்தது.
இந்த விபத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக பாலத்தில் சிக்கியிருந்த பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கூவம் ஆற்றில் நீர் குறைவான அளவே இருந்ததால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பாதை அடைக்கப்பட்டது. இதையடுத்து மாரத்தான் ஓட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே மரப்பாலத்தின் உறுதித்தன்மையை சோதிக்க வேண்டும் என்றும், பராமரிப்பு பணியை மேற்கொண்டு புதிய தடுப்பு கட்டைகள் போட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், இத்தகைய விபத்து ஏற்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications