மணமான 11 நாளில் மாஜி காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு
திருவண்ணாமலை: பெரணமல்லூர் அருகே திருமணமான 11 நாளில் மாஜி காதலனுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்தார். இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கும், வேலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் கடந்த 4ம்தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 15ம்தேதி இளம்பெண், தனது கணவருடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

அன்று மாலை மீண்டும் மாமியார் வீட்டுக்கு செல்ல முனுகப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் தம்பதியினர் நின்றுள்ளனர். அப்போது இளம்பெண், 'தான் படித்த கல்லூரி சான்றிதழ்களை எனது வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டேன். நீங்கள் போய் அதை எடுத்து வாருங்கள்' என கணவரிடம் கூறியுள்ளார்.
இதனால் அவர் மாமியார் வீட்டுக்கு சென்று சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை.
இதுகுறித்து விசாரித்தபோது தனது மனைவி, பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த தனது காதலனுடன் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இவர்கள் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும்போதே இருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை பெரணமல்லூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications