வரத்து குறைவு கத்தரிக்காய் விலை கிடுகிடு உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
நெல்லை: நெல்லை பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக கத்தரிக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் மற்றும சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகள் பாவூர் சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து மாவட்டத்தின் பிற இடங்கள் மற்றும் கேரளாவுக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனைக்காக கொணடு செல்வர்.

மார்கெட்டுக்கு தினசரி 100 குவிண்டலுக்கு மேல் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் கத்தரிக்காய் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. மாலை கத்தரிக்காய் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று காலை அவற்றின் விலை ரூ.100 முதல் ரூ.110 வரை விற்கப்பட்டு வருகிறது.
சில்லரை விற்பனை கடையில் கத்தரிக்காய் இதைவிட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழையால் பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கத்தரிக்காய் செடிகளிலேயே கருகி விட்டது.
இதன் காரணமாகவே கத்தரிக்காய் வரத்து குறைந்து விலை கடுமையாக உயர காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கத்திரிக்காய் விலை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications