தருமபுரியில் சரக்கோடு கோழிப் பண்ணை மருந்தை கலந்து குடித்த சகோதரர்கள் பரிதாப பலி!
தருமபுரி: தருமபுரியில் சரக்கோடு தண்ணீருக்கு பதிலாக மருந்தை கலந்து குடித்த சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் வெங்கடாசலம் 75 வயதானவர். இவர் கோழிப் பண்ணை நடத்தி வந்தார். இவரது தம்பி 55 வயதான ராஜா. இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு மதுகுடித்துள்ளனர்.

அப்போது, மதுவில் கலப்பதற்கு தண்ணீருக்குப் பதிலாக, கோழிப் பண்ணையில் பயன்படுத்தக்கூடிய ஒருவகை மருந்தைக் கலந்து இருவரும் குடித்துள்ளனர். இதில் மயக்கமடைந்து கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், உயர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெங்கடாசலம், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜா ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வெங்கடாசலத்தின் மனைவி சரோஜா என்பவர் அளித்த புகாரின் பேரில் அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications