சென்னை அண்ணா சாலை திடீர் பள்ளத்தில் சிக்கிய கார், பேருந்து ராட்சத கிரேன் மூலம் பாதுகாப்பாக மீட்பு!
சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கிய கார் ராட்சத கிரேன் இயந்திரம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேருந்தை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கிய கார் மற்றும் மாநகர பேருந்து ஆகியவை ராட்சத கிரேன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
சென்னை: சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கிய கார் ராட்சத கிரேன் இயந்திரம் மூலம் முதலில் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு பேருந்தும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து வடபழனி நோக்கி இன்று 25 ஜி என்ற மாநகர பேருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சர்ச் பார்க் பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நின்று விட்டு அந்த பேருந்து புறப்பட்டது.

திடீர் பள்ளம்
பின்னால் வந்து கொண்டிருந்த கார் அந்த பேருந்தை முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் பெரிய அளவிலான பள்ளம் திடீரென ஏற்பட்டு பேருந்து கவிழ்ந்தது. பேருந்துக்கு அருகே வந்த காரும் பள்ளத்தில் சிக்கியது.

மெட்ரோவால் துயரம்
இதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டதுதான் இந்த பள்ளம்.

கார் முதலில் மீட்பு
இதையடுத்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். முதலில் கார், ராட்சத கிரேன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

பேருந்தும் மீட்பு
இதனைத் தொடர்ந்து பேருந்தும் கிரேன் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்த மீட்புப் பணிகளைப் பார்வையிட நூற்றுக்கும் அதிகமாக பொதுமக்கள் குவிந்தனர். இம்மீட்புப் பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications