டிக்கெட் கட்டண உயர்வு: நாளை முதல் எந்த பஸ்சுக்கு எவ்வளவு கட்டணம்?
அரசு பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கட்டண உயர்வு எந்த பேருந்துகளுக்கு எவ்வளவு கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- மாநகரப் பேருந்துகளில் இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வெளியூர் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் 10 கி.மீ வரை ரூ.5 ஆக உள்ள கட்டணம் ரூ.6 ஆகிறது.
- 30 கி.மீ வரை ரூ.17 ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்டணம் ரூ.24 ஆக உயருகிறது. குளிர்சாதன பேருந்தில் 30 கி.மீ-க்கான கட்டணம் 27 ரூபாயிலிருந்து ரூ.42ஆக உயர்த்தப்படுகிறது.
- அதிநவீன சொகுசுப் பேருந்தில் 30 கி.மீக்கு 21 ரூபாயிலிருந்து ரூ.33ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- மாநகரப் பேருந்தில் 20வது நிலைக்கு கட்டணம் ரூ.12லிருந்து ரூ.19 ஆகிறது. அதே போல 28 நிலைகள் கொண்ட தொலைவிற்கு பேருந்து கட்டணம் 14 ரூபாயிலிருந்து 23 ரூபயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- அதி சொகுசு இடைநில்லா பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு 18 ரூபாயில் இருந்து ரூ.27ஆக உயர்கிறது.
- வோல்வோ பேருந்தில் கட்டணம் 30 கி.மீக்கு 33 ரூபாயில் இருந்து ரூ.51அக உயர்கிறது. இந்த கட்டண உயர்வு நாளை சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications