எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
நெல்லை: திசையன்விளையில் எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தம் இடிந்து விழுந்ததால் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி 14வது வார்டுக்கு உள்பட்ட நந்தன்குளத்தில் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.4 லட்சம் செலவில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு வந்தது. ராதாபுரத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் இந்த பணியை கான்டிராக்ட் எடுத்து செய்து வந்தார். இந்த பஸ் நிறுத்த கட்டுமான பணிகள் முடிவடைந்து வெள்ளை அடிக்கும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அருகில் நின்று கொண்டிருந்த சிறுவர்களும், பெரியவர்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏறபடவில்லை. 3 கான்கிரீட் தூண்களின் பலத்தில் நின்ற மேற்கூரை அதிக பாரத்தால் சரிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திறப்பு விழா நடப்பதற்கு முன்பே பஸ் நிறுத்த கட்டிடம் இடிந்து விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ. நிதி முறையாக செலவிடப்பட்டதா, தரமான கட்டுமான பொருட்கள் பெறப்பட்டதா, முறையாக டெண்டர் விடப்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் முறைகேடு நடந்ததா என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications