சென்னை முதல் குமரி வரை பாதிப்பு... தமிழகம் முழுக்க முடங்கிய பேருந்துகள்
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுக்க பேருந்து நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது. பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னையில் தொடங்கி குமரி வரை நடக்கும் இந்த போராட்டத்தில் இன்னும் சரியான தீர்வு எட்டப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் எப்படி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 33 நகர பேருந்துகள் 34 புறநகர் பேருந்துகள் என 67 பேருந்துகள் உள்ளன. இதில் 2 நகர பேருந்துகள் 1 புறநகர் பேருந்து பணி காலத்திற்கு முன்பே டெப்போவில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. பணிமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாளை காலை முதல் பேருந்துகள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கன்னியாகுமரி
நாகர்கோவிலில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துகளை ஒட்டுனர்கள் பணிமனைகளுக்கு எடுத்து சென்றனர். எல்லா பேருந்துகளும் அங்கு வரிசையாக நிற்கவைக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

தூத்துக்குடி
போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி உள்ளிட்ட ஆறு போக்குவரத்து பனிமனைகளில் நேற்று இரவு முதல் பேருந்து நிறுத்தபட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது . இதனால் நகர , புறநகரப்பேருந்துகள் போக்குவரத்து பணிமனைக்கு கொண்டுவரப்பட்டன .

திருப்பூர்
13 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடண்படாததை ஒட்டி திருப்பூரில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்ய தொடங்கினர் . இதனால் நகர , புறநகரப்பேருந்துகள் போக்குவரத்து பனிமனைக்கு கொண்டுவரப்பட்டன . இதனால் பணிமுடிந்து வீட்டிற்கு செல்லும் பயணிகள் கஷ்டப்பட்டனர். மேலும் கிருஷ்ணகிரி, விருதுநகர், திருவாருர், சாத்தியமங்கலம் பகுதியில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications