தொழிலதிபர் மர்மச் சாவு: அழுகிய நிலையில் காரில் இருந்து சடலம் மீட்பு !
சென்னை: சென்னை, நெற்குன்றத்தில் காரில் மர்மமான அழுகிய நிலையில் கிடந்த தொழிலதிபரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.
கோயம்பேடு நெற்குன்றம் அருகேயுள்ள மேட்டுக்குப்பம் பாலவிநாயகர் நகர் ஜீவா குறுக்குத் தெருவைச் சேர்ந்த ரா.செல்வமணி (35), அம்பத்தூரில் அலுமினிய பேப்ரிகேஷன் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபட செல்வமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.

இந்த நிலையில், மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரை ஜெயந்தி கண்டித்தபோது, இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, செல்வமணி வீட்டில் இருந்த காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து, செல்வமணியைத் தேடி வந்தனர்.
இதற்கிடையே பாலவிநாயகர் நகர் காமராஜர் தெருவில் கடந்த சில நாட்களாக கேட்பாரற்று நின்றிருந்த காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் அங்கு சென்றனர். அப்போது, செல்வமணி அழுகிய நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது.
உடனே போலீஸார் சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரின் ஏ.சி.யில் இருந்து வெளியான விஷவாயுவை சுவாசித்ததால் அவர் இறந்தாரா அல்லது அதிக மதுபோதையின் காரணமாக இறந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications