ஜெயலலிதாவின் உடல்நிலை ஓராண்டாகவே மோசமாக இருந்தது.. சி.ஆர். சரஸ்வதி திடீர் பல்டி
ஜெயலலிதாவின் உடல்நிலை ஓராண்டாகவே மிகவும் மோசமாக இருந்தது என்று தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி திடீநென பல்டி அடித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் உடல்நிலை ஓராண்டாகவே மிகவும் மோசமாக இருந்தது என்று தினகரன் ஆதரவாளர் சி. ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா இறப்பு குறித்து சமீபகாலங்களாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி வந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அவர் கூறுகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை யாரும் சந்திக்கவில்லை.

ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தினர் என்ன கூறினார்களோ அதைத்தான் நாங்கள் ஊடகங்களுக்கு கூறினோம். நாங்கள் பொய் கூறியதற்கு எங்களை மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கருத்து குறித்து தினகரனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், நைட்டி போட்டபடி உடல் இளைத்த நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற புகைப்படங்களும், வீடியோ எங்களிடம் உள்ளது. அதை தேவைப்படும் போது எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுப்போம்.
ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில் சசிகலா எடுத்த வீடியோ எங்களிடம் உள்ளது, சிபிஐ மட்டுமல்ல, இன்டர்போல் விசாரிக்கவும் நாங்கள் தயார் என்றார். இதுகுறித்து தினகரன் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், ஒரு வருடமாகவே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. இறுதியாகதான் அவர்ம அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் நன்றாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்றெல்லாம் கூறியவர் சி.ஆர்.சரஸ்வதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications