பொய் சொல்வதுதான் எடப்பாடி அரசின் கடமையாக இருக்கு... சி.ஆர்.சரஸ்வதி 'பொளேர்': வீடியோ
பொய் சொல்வதுதான் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கடமையாக உள்ளது என சி.ஆர்.சரஸ்வதி விமர்சித்துள்ளார்.
விழுப்புரம்: பொய் சொல்வதுதான் எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஒரே கடமையாக உள்ளது என அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி சாடியுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளரும் தினகரன் ஆதரவாளருமான சி.ஆர் சரஸ்வதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,'' ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கட்டாயம் தேவை. அப்போதுதான் உண்மைகள் வெளிவரும். தற்போது நாங்கள் சொன்னது பொய் என்று எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் உள்ளவர்கள் கூறி வருகிறார்கள்.

சிபிஐ விசாரணை செய்தால் தான் யார் உண்மை கூறினார்கள், யார் பொய் சொன்னார்கள் என்பது தெரிய வரும். இதைத்தான் சசிகலாவும் தினகரனும் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதா மரணத்தில் பொய் சொன்னோம் என்று சொல்கிறவர்கள் தான் நீட் விஷயத்திலும் பொய் சொன்னார்கள். அதனால் தான் அரியலூர் அனிதா தற்கொலை செய்துகொண்டார். இந்த அரசுக்கு பொய் சொல்வதுதான் கடமையாக இருக்கிறது'' என கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications