போகிற இடத்திலாவது விசுவாசமாக இருங்கள்.. நிர்மலாவுக்கு சி.ஆர்.சரஸ்வதி அட்வைஸ் !
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து நிர்மலா பெரியசாமி ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.
சென்னை: போகிற இடத்திலாவது விசுவாசமாக இருங்கள் என்று நிர்மலா பெரியசாமிக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பி.எஸ் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பையும் தொடங்கி நாங்கள் தான் உண்மையான அதிமுக எனவும் கூறிவருகிறார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.

இந்நிலையில் சசிகலா தரப்பு அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. சசிகலா தரப்பு அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது நிர்மலா பெரிசாமி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசியுள்ளார். இதற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் சிஆர்.சரஸ்வதி, நிர்மலா பெரியசாமியை கடுமையாக திட்டியுள்ளனர். குண்டுக்கல்யாணம், சிஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். கட்சியில் இருந்து வெளியே போகுமாறும் கூறியுள்ளனர்.இதையடுத்து நிர்மலா பெரியசாமி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைப்பேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது போலியான அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற நல்லவர்களுடன் சேரப்போவதாக அவர் கூறினார். இதையடுத்து இன்று மாலை ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார் நிர்மலா பெரியசாமி.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி போகிற இடத்திலாவது விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications